

தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பு வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி அரசு மருத்துவமனை யில் தட்டம்மை, ரூபெல்லா தடுப் பூசி முகாம் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சியை நேற்று தொடங்கிவைத்த அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டு களாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி இடும் திட்டத்தில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி இடப்படும். தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. ஆனால், இந்தத் தடுப்பூசி குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புகின்றனர். அவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எங்கா வது காய்ச்சல் பாதிப்பு அதிகம் பேருக்கு இருப்பது கண்டறியப் பட்டால் அந்தப் பகுதியில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
பன்றிக் காய்ச்சல் சிகிச் சைக்கான வசதிகள் அரசு மருத் துவமனைகளில் உள்ளது. மேலும், மாத்திரைகளும் அரசு மருத்துவ மனைகளில் போதிய அளவுக்கு இருப்பு உள்ளது என்றார்.