

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று பிறந்த தமிழ் புத்தாண்டு ஏவிளம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. புத்தாண்டு பிறந்ததையொட்டி, சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், திருவேற்காடு கரு மாரியம்மன் கோயில், புரசைவாக் கம் நிவாச பெருமாள் கோயில், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட வற்றில் அதிகாலையே நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு களும், அபிஷேக ஆதாரனைகளும் நடத்தப்பட்டன.
பக்தர்களும் குடும்பத்தோடு கோயில்களில் அதிகாலையில் இருந்தே குவிந்தனர். நீண்ட வரிசை யில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதனால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. பல கோயில் களில் பக்தர்களுக்கு அன்னதான மும் வழங்கப்பட்டன. நேற்று விடு முறை தினம் என்பதால், மெரினா உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.