Published : 23 Mar 2017 09:02 AM
Last Updated : 23 Mar 2017 09:02 AM

ஜாமீன் வழங்கும்போது நூதன நிபந்தனைகளை விதிக்கக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

ஜாமீன் வழங்கும்போது சீமைக் கருவேல மரங்களை வெட்ட வேண்டும், வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன போன்ற நூதனமான நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ஞானம் என்பவர் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘‘கீழமை நீதிமன்றங்களில் நிபந்தனை ஜாமீன் அளிக்கும்போது வழக் கத்துக்கு மாறாக கருவேல மரங்களை வெட்டச் சொல்வது, வன விலங்குகளுக்காக குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பக் கூறுவது போன்ற நிபந்தனைகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகள் சட்டத் தில் இல்லாதவை. வழக்கில் தண்டிக்கப்படும் வரை சம்பந்தப் பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விசாரணைக்கு முன்பாக அவர்களுக்கு தண் டனை வழங்குவது என்பது மனித உரிமைக்கு எதிரானது. நீதி மன்றங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். எனவே கீழமை நீதிமன்றங்கள், நீதி பரிபாலனத்தின்போது கவனத்து டனும், எச்சரிக்கையுடனும் உத்தரவு களையும், நிபந்தனைகளையும் பிறப்பிக்க வேண்டும்.

இதுபோல விதிக்கப்படும் நூதன நிபந்தனைகள் குற்றவாளிகள் குற் றத்தையும் செய்துவிட்டு, சீமைக் கருவேல மரங்களை வெட்டினால் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்மறையான எண்ணத்தையும், தவறான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்’’ என தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x