Published : 05 Jan 2016 08:08 AM
Last Updated : 05 Jan 2016 08:08 AM

தென்சென்னை, திருப்பூர் மாவட்ட அதிமுக செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு

தென்சென்னை (தெற்கு), திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெய லலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜி.செந்தமிழன் எம்எல்ஏ, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொள்ளாச்சி ஜெய ராமன் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பொறுப்பு களில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர். தென் சென்னை தெற்கு மாவட்டச் செய லாளராக மாநகராட்சி 142- வது வார்டு கவுன்சிலர் எம்.எம்.பாபுவும், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை கே.ராதா கிருஷ்ணனும் நியமிக்கப் படுகின்றனர்.

ப.மோகனுக்கு பதவி

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து உடுமலை கே.ராதா கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெய ராமனும், அமைப்புச் செயலாளராக ஊரக தொழில்துறை அமைச் சர் ப.மோகனும் நியமிக்கப் படுகின்றனர்.

இவ்வாறு அந்த அறி விப்பில் ஜெயலலிதா தெரி வித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உடுமலை கே.ராதாகிருஷ் ணன், எம்.எம்.பாபு ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றனர்.

செந்தமிழன் நீக்கம் ஏன்?

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து சமீபத்தில்தான் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகி கள் அறிவிக்கப்பட்டனர். தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த விருகை வி.என்.ரவி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்திய வெள்ளத்தால் சைதாப்பேட்டை பகுதி அதிக அளவு பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரணப் பணிகளில் செந்தமிழன் ஈடுபாடு காட்டவில்லை என் பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கட்சித் தலைமைக்கு சென்றதால் அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அதிமுக தேர்தல் பிரிவு செயலாளராக பதவி வகித்த பொள் ளாச்சி ஜெயராமன், சமீபத் தில்தான் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவ ருக்கு அதே பதவி அளிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x