

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளை யும்’என்ற பழமொழி மிகச் சரியாக உள்ளது என்று சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பொறுத்தவரை, `முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற பழமொழி மிகச் சரியாக உள்ளது. ஏற்கெனவே திமுக செய்ததைத்தான் தற்போது அதிமுக செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் சஸ் பெண்ட் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவ ராக இருந்த ஜெயலலிதா தனியாக சென்று பேசினார். இரு கட்சிகளிடமும் தவறுகள் உள்ளன. சபாநாயகரை அவதூறாக பேசியுள்ளனர். அவரது உருவபொம் மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ள னர். இது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல.
சபாநாயகருக்கு எதிரான போராட் டங்கள் குறித்த செய்தியை அறிந்ததும் மூத்த தலைவரான கருணாநிதி அதை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யவில்லை. தமிழக சட்டப்பேரவை யின் மாண்பு தற்போது குறைந்து வருகிறது. திமுகவை சேர்ந்த 10 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்தை தெரிவித்திருக்கலாம். அதேநேரத்தில் திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
ஜனநாயக விரோத செயல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையை எதிர்க்கட்சி இல்லாமல் நடத்தியது ஜனநாயக விரோத செயல். சட்டப்பேரவைத் தலைவரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது. தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித் துள்ள நிலை யில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி இல்லாமல் காவல்துறை மானியக் கோரிக்கையை நடத்தியுள்ளது திட்டமிட்ட செயல். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகள் கவலையளிக்கின்றன. கலகலப்பாக செல்ல வேண்டிய சட்டப்பேரவை, கைகலப்பு சபையாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சட்டங்கள் இயற்ற வேண்டிய இடத்தில், சட்ட மீறல்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. திமுக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை அல்ல.