ஆக.1 முதல் மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்

ஆக.1 முதல் மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவா தம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கு கிறது.

தமிழக சட்டப்பேரவையில், 2016-17-ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட் ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்தார்.

ஏற்கனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட அன்று நடந்த அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி திங்கள்கிழமை முதல் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல்கள் விவாத இறுதியில் பெறப்படும். துறை அமைச்சர்கள் அந்தந்த துறைகளில் இந்தாண்டில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிடுவர்.

இதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகளின் மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகி யோர் தங்கள் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து, புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகி்ன்றனர்.

தொடர்ந்து 2-ம் தேதி வனம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள்,சட்டம் தொடர் பான மானிய கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் செப்டம்பர் 2-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மானிய கோரிக்கைகள் விவாதத்தின் போது, கேள்வி நேரம் இருக்கும் என்றும், 110- விதி யின்கீழ் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்றும் பேரவை வட்டாரங் கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in