

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி கடந்த 2015-ல், ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. வாடகைக் கட்டிடங்களில் அக்கல்லூரிகள் இயங்கி வந்த நிலையில், தண்டை யார்பேட்டை அரசு அச்சக திட்ட சாலை அருகில் ரூ.8 கோடியே 48 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டது.
அதேபோல் பாலிடெக்னிக் கல் லூரிக்கு தண்டையார்பேட்டை காமராஜர் சாலையில் ரூ.25 கோடியே 66 லட்சம் செலவில் நிர்வாகம் மற்றும் வகுப்பறை கட்டி டங்கள் கட்டப்பட்டன. இவற்றை நேற்று காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இடைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் ரூ.25 கோடியே 12 லட்சம், நபார்டு கடனுதவி திட்டத்தில் ரூ.5 கோடியே 26 லட்சம் மதிப்பில் 18 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இது தவிர, திருவள்ளூர், காஞ்சி புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ரூ.346 கோடியே 14 லட்சத்து 77 ஆயி ரம் மதிப்பில் பள்ளிக்கட்டிடங்கள் உட்பட ரூ. 421 கோடியே 45 லட் சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட் டுள்ளன. இவற்றையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
பணி நியமனம்
மேலும், எழுது பொருள் அச்சகத்துறையில் காலியாக உள்ள மஸ்தூர் பணியிடங்களை நிரப்ப, பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களில் கருணை அடிப்படையில் பணி கோரி முதுநிலை வரிசையில் உள்ள 50 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, தலை மைச் செயலர் மற்றும் துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.