Published : 07 Jul 2016 08:35 AM
Last Updated : 07 Jul 2016 08:35 AM

நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள்: தமிழக அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை

பயணிகளின் வசதிக்காக தமிழக நெடுஞ்சாலைகளில் ‘அம்மா’ உணவகங்கள் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் நகரமயமாக்கல் வளர்ந்துவரும் நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் விவகாரம் போன்ற பல்வேறு பணியின் காரணமாக மக்கள் நகரங்களுக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தலைநகர் சென்னைக் கு தினமும் பல ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர். ரயில்களைவிட சாலை வழியாகத் தான் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

போக்குவரத்து அதிகரித் துள்ளதால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணி களின் வசதிக்காக வழியோர உணவகங்களும் ஏராளமாக உருவாகி வருகின்றன. ஆனால், இந்த உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்ப துடன் எல்லா பொருட்களும் 50 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகின்றன. ஒரு காபி விலை ரூ.20, டீ ரூ.15, ஒரு இட்லி ரூ.15 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய் யப்படுகின்றன.

பசியாக இருக்கும் மதியம், இரவு நேரத்தில் இந்த உணவ கங்களில் பஸ்களை நிறுத்துவ தால் பயணிகள் வேறு வழியில் லாமல் அதிக விலை கொடுத்து தரமில்லாத உணவை சாப்பிட வேண்டியுள்ளது. ஏழை, எளிய மக்களோ பசியுடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைகளில் அரசே குறைந்தவிலை உணவகங்களை திறக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:

வெளியூர் செல்லும் மக்களில் பெரும்பாலோர் பஸ்களில்தான் செல்கின்றனர். பஸ் டிரைவர்க ளோ, பசி நேரத்தில் ஊருக்கு வெளியே உள்ள உணவகங் களில் வண்டியை நிறுத்து கின்றனர். இந்த உணவகங்களில் டீ, சாப்பாடு எல்லாமே 30 முதல் 50 சதவீதம் வரை விலையை உயர்த்தி விற்கின்றனர். எனவே, லட்சக்க ணக்கான மக்கள் பயன் பெறும் வகையில் நெடுஞ் சாலைகளில் அரசு சார்பில் ‘அம்மா’ உணவகங்களை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் தரப்பில் இதுபோன்ற புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு களுடன் நடத்தப்பட்ட ஆலோ சனை கூட்டத்தில், நெடுஞ்சாலை களில் ‘அம்மா’ உணவகங்கள் திறந்தால், லட்சக்கணக்கான பயணிகள் பயன்பெறுவர் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசுக்கு இந்த கோரிக் கையை பரிந்துரை செய்துள் ளோம். அரசு முடிவு செய்து இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கி றோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x