

சென்னை இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் கொலையாளி ராம்குமாரின் உள்நோக்கத்தை அறிய தனிப்படையினர் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.
அப்போது அவர், "சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு கூட்டாளியாக யாரும் செயல்படவில்லை.
ராம்குமார் கடந்த 3 மாதங்களாகவே சுவாதியைப் பின் தொடர்ந்துள்ளார். சுவாதியுடன் பழக வேண்டும் என அவர் விரும்பியிருக்கிறார். ஆனால், சுவாதி ராம்குமாருடன் பழக மறுத்திருக்கிறார். ராம்குமார் சுவாதியை பின் தொடர்ந்ததற்கான ஆதாரங்கள் போலீஸ் வசம் உள்ளன.
இருப்பினும், ராம்குமார் சுவாதியை கொலை செய்வதற்கான உள்நோக்கத்தை அறிய தனிப்படையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்" என்றார்.