Published : 06 Apr 2017 09:28 AM
Last Updated : 06 Apr 2017 09:28 AM

கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு

தேசிய அளவில் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தப் பிரிவு மற்றும் பொறியியல், மேலாண்மை கல்வி, பல்கலைக்கழகம், கல்லூரி, பார்மசி என 6 பிரிவுகளின் கீழ் தலா 100 சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார்.

6 பிரிவுகளின்கீழ்..

இதில், மேற்குறிப்பிட்ட 6 பிரிவுகளின்கீழ் தமிழகத்தில் இருந்து சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி உள் பட 106 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள் ளன. அவற்றின் விவரம் பிரிவுகள் வாரியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x