Published : 17 Nov 2014 08:39 am

Updated : 17 Nov 2014 09:07 am

 

Published : 17 Nov 2014 08:39 AM
Last Updated : 17 Nov 2014 09:07 AM

கருப்புப் பணம் மீட்பில் இந்தியாவுடன் ஒத்துழைக்க ஜி-20 நாடுகள் சம்மதம்: மாநாட்டு அறிக்கையில் தகவல்

20

கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவிலும் இதற்கான ஆதரவைத் திரட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களான பிரேசில் அதிபர் தில்மா ரூசோஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோரை நேற்று முன்தினம் மோடி சந்தித்தார்.

அப்போது, கருப்புப் பணத்தை மீட்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய மோடி, “வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. கருப்பு பணத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் எழுந்துள்ளன. எனவே, கருப்பு பணத்தை மீட்பதில் சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, ஜி-20 மாநாட்டி லும் கருப்பு பணம் குறித்த கோரிக் கையை மோடி வலியுறுத்தினார்.

எல்லை கடந்த வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு குறித்து கவலை தெரிவித்த மோடி, முதலீடு, தொழில்நுட்பம் தாராளமாக கிடைக் கும் நிலை உருவாகி இருப்பதால் வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, வரி தவிர்ப்பு மற் றும் வரி ஏய்ப்புகள் குறித்து ஜி-20 நாடுகள் கவனத்தில் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாடு நிறைவடைந் ததையடுத்து, மாநாட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) மற்றும் ஜி 20 அமைப்புகள் வரி ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு (பேஸ் எரோஷன் அண்ட் பிராபிட் ஷிப்டிங்) தொடர்பாக சர்வதேச வரிச் சட்டங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை வர வேற்கின்றன. மேலும், இந்நட வடிக்கைகளை அடுத்த ஆண்டுக் குள் இறுதி செய்ய இவ்வமைப்பு உறுதிபூண்டுள்ளது.

நாடுகளின் வருவாய் ஆதாரங்களைப் பாதுகாக்க நேர்மையான சர்வதேச வரி விதிப்பு முறையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள், வரி தவிர்ப்புக்காக மேற்கொள்ளும் உத்திகள் பிஇபிஎஸ் (பேஸ் எரோஷன் அண்ட் பிராபிட் ஷிப்டிங்) என ஓஇசிடி அமைப்பால் அழைக்கப்படுகின்றன. தாங்கள் ஈட்டும் லாபத்துக்கு உரிய வரியை செலுத்தாமல் அவை தவிர்க்கின்றன. இதைத் தவிர்க்க சர்வதேச வரிச் சட்டத்தை நவீனப் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெளிப்படைத்தன்மையான வரிவிதிப்பு நடவடிக்கை தொடர்பான குறிப்பு, வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை. முழு அமர்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் உறுதியான தலையீட்டின் பேரிலேயே, இறுதி மாநாட்டு அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது.

மோடி வலியுறுத்தியதற்குப் பிறகு, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. இறுதி அறிக்கையில் இக்கருத்து பிரதிபலிக்க வேண்டும் என அவை வலியுறுத்தின.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்சினையும் ஜி-20 மாநாட்டு அறிக்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

கருப்புப் பணம் மீட்புஇந்தியாவுடன் ஒத்துழைக்க சம்மதம்ஜி-20 நாடுகள் சம்மதம்ஜி 20 மாநாட்டு அறிக்கையில் தகவல்பிரதமர் மோடி

You May Like

More From This Category

More From this Author