நாட்டில் கருப்பு பணம் உருவாவதற்கு தங்கம் முக்கிய காரணியாக திகழ்கிறது: பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி பேச்சு

நாட்டில் கருப்பு பணம் உருவாவதற்கு தங்கம் முக்கிய காரணியாக திகழ்கிறது: பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி பேச்சு

Published on

நாட்டில் கருப்பு பணம் உருவாவதற்கு முக்கிய காரணியாக தங்கம் திகழ்கிறது என்று பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராஜாஜி பொது நல மையம் மற்றும் கிராபிகோ சார்பில் என்.சேஷாத்ரி எழுதிய ‘நம் வீட்டு தங்கம் நம் நாட்டுக்கு உதவட்டுமே’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி நூலை வெளியிட, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராகவன் பெற்றுக்கொண்டார். பின்னர் குருமூர்த்தி நிகழ்ச்சியில் பேசியதாவது:

சீனாவும், இந்தியாவும் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இது உலக தங்க உற்பத்தியில் 24 சதவீதமாகும். தங்க இறக்கு மதியை குறைத்தாலே நம் நாட்டில் தங்கத்தின் விலை வெகுவாக குறையும். இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்கும்.

இந்தியாவில் 40 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 25 சதவீதம் ஆபரணத் தங்கமாக மாறாமல் உள்ளது. அரசு முயற்சி செய்தால் இவற்றை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவர முடியும். கருப்பு பணம் உருவாவதற்கு தங்கம் முக்கிய காரணியாக திகழ்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in