

மதுரை மாவட்டத்தில் நடைபெற் றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நாளை விசாரணையைத் தொடங்கு கிறார். அவருக்கு மதுரையில் தனி அலுவலகம் தயாராகி வருகிறது.
கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனும், பாதுகாப்பு அளிப்பது குறித்து மதுரை காவல்துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவுகள் அனுப் பப்பட்டுள்ளன. இதையடுத்து மதுரை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினாரை அழைத்து மதுரை ஆட்சியர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், சகாயம் ஆய் வுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வது, தனி அலுவலகம், விரும்பும் அதிகாரிகளை அனுப்புவது, சட்ட உதவிகள், வாகன வசதிகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வசதிகள் செய்து தரப்படும்
இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சகாயத்துக்கு மதுரையில் உள்ள பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ் வளர்ச்சித் துறையிடம் 2 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையை ஒதுக்க வாய்ப்புள்ளது. மதுரை வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை உட்பட பலர் கிரானைட் முறைகேடு விசாரணையில் ஆரம்பம் முதல் ஈடுபட்டவர்கள். இவர்களில் யாரை தனக்கு உதவியாகக் கேட்டாலும் உடனே அனுப்பப்படவுள்ளனர். 175 கிரானைட் குவாரிகளில் நடந்த ஆய்வில் 84 குவாரிகளில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சகாயத்திடம் ஒப்படைக்கப்படும். பல வழக்குளில் குற்றப்பத்தி ரிகையை காவல்துறையினர் தயார் செய்து வருகின்றனர். இதுகுறித்த விவரங்களும் அளிக்கப்படும் என்றார்.
புதிய புகார்கள் குவியும்
பொதுப்பணித் துறை கண்மாய், கால்வாய், நீர் ஓடைகள், அரசு புறம் போக்கு நிலங்களைக் காணவில்லை என்றும், குவாரி அதிபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் களை அளித்து வருகின்றனர். மேலூர் பகுதியில் விவசாயமே செய்ய முடி யாமல் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் தரிசாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். சகாயம் ஆய்வுக்கு வரும்போது ஏராளமான புகார் மனுக்கள் குவியும் நிலை உள்ளது. இதை விசாரித்தால் கிரானைட் பிரச்சினை மேலும் சிக்கலாகும் வாய்ப்புள்ளது என கிரானைட் குவாரி முறைகேட்டில் சிக்கியுள்ளவர்கள் அஞ்சுகின்றனர்.
கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்
அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து சகாயம் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: தருமபுரி நத்தம் காலனியில் நடந்த கலவரம் தொடர் பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக் கமிட்டி அமைக்கப் பட்டது. பாதிக்கப்பட்டோர் தரப்பில் கேட்டுக் கொண்டதன்படி, வேளாண் துறை கூடுதல் செயலர் ஆர்.வாசுகி, கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் ஆர்,பழனிச்சாமி உள்ளிட்டோர் கமிட்டியில் நியமிக்கப்பட்டனர். அவர் கள் தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படாமல், கூடு தல் பொறுப்பாகவே விசாரணைக் கமிட்டியில் இடம் பெற்றனர்.
அதேபோல், சகாயமும் அறிவியல் நகரத் துணைத் தலைவர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்படாவிட்டா லும், கூடுதல் பொறுப்பாக விசா ரணையை தொடங்கலாம். அரசு அனுமதி அளித்துவிட்டதால், விசா ரணையை தொடங்குவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் விரும்பும் அதிகாரிகளை குழுவில் நியமித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கும். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித் தனர்.