சென்னை பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் இடங்கள் அதிகரிப்பு

சென்னை பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் இடங்கள் அதிகரிப்பு
Updated on
1 min read

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருப்பதால் உறுப்புக் கல்லூரி களில் இளங்கலை படிப்பு களில் இடங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவுசெய்துள் ளது.

சென்னை பல்கலைக்கழகத் தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சிண்டிக்குழு தலைவரான உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமை தாங்கினார். பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் முன்னிலை வகித்தார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, கல்லூரி கல்வி இயக்குநர் சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் குறைந்து கலை அறிவியல் படிப்புகளுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருப்பதால் இளங்கலை படிப்புகளில் இடங் களின் எண்ணிக்கையை அதி கரிக்க சிண்டிகேட் முடிவெடுத்துள் ளது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளிலும் இளங்கலை (பிஏ, பிபிஏ, பிகாம்), இளம் அறிவியல் (பி.எஸ்சி) படிப்பு களில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கென கல்லூரிகள் தனியாக பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து உறுப்புக் கல்லூரி களுக்கும் தகவல் அனுப்பப்படும். கல்லூரிகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே இடங்களை அதிகரித்து கூடுதல் மாணவர் களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு டேவிட் ஜவகர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in