Published : 28 Aug 2016 10:07 AM
Last Updated : 28 Aug 2016 10:07 AM

‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது: முன்னணி நிறுவனங்களின் கார், பைக்குகள் அட்டகாச அணிவகுப்பு - நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நடக்கிறது

‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ 2016 என்ற பெயரிலான பிரம் மாண்ட வாகனக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதை இளைஞர்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 2 நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ 2016 என்ற பிரம்மாண்ட வாகனக் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத் தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழா வில் திரைப்பட இயக்குநர் லிங்கு சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ‘தி இந்து’ குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் லோச்சன் முன்னிலை வகித்தார்.

காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் விதவிதமான கார்கள், புதுரக பைக்குகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. மெட்ராஸ் ஹெரிட் டேஜ் மோட்டாரிங் கிளப் உதவியுடன் பழமையான கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வியப்பூட்டும் ரோல்ஸ் ராய்ஸ்

கண்காட்சியில் முன்னணி கார் நிறுவனங்களான பென்ஸ், நிஸான், டொயோட்டா, ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டாடா, மாருதி சுஸுகி, ரெனால்ட், ஸ்கோடா, ஃபோக்ஸ் வேகன், ஃபியட், ஹுண்டாய் உள் ளிட்ட நிறுவனங்களின் புதுவகை யான கார்கள் இடம்பெற் றுள்ளன.

இதுதவிர, உலகின் மதிப்புமிக்க காரான ரோல்ஸ் ராய்ஸ் (டான்) வகை காரும் இடம்பெற்றுள்ளது சிறப்பம்ச மாகும். இதில் தானாக திறக்கும் பக்கவாட்டு கதவுகள், திறந்து மூடும் மேற்கூரை போன்ற சிறப்பு அம்சங்களை பார்வையாளர் கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரும் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

அலைமோதும் அரங்கம்

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, இளைஞர்களைக் கவரும் சூப்பர் பைக்குகளுக்காக கண்காட்சியில் பிரேத்யேக அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஹோண்டா, டுகாடி, அப்ரிலா கேபோனாட், ஹார்லி டேவிட்சன், கவாஸகி நிஞ்சா ஹெச்2, மோட்டோ குஸ்சி, பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் உள்ளிட்ட பைக்கு கள் இடம்பெற்றுள்ளன.

அட்டகாச மான, மிரட்டலான புதிய வகை பைக்குகள் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளதால் சூப்பர் பைக்குகள் அரங்கில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர, இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி யும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

கண்காட்சி இன்று நிறைவு

கண்காட்சி குறித்து சைதாப் பேட்டையை சேர்ந்த இராசத் (26) என்பவர் கூறும்போது, ‘‘உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த வாகனங்களை ஒரே இடத்தில் பார்வையிட வாகனப் பிரியர் களுக்கு இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை ஹெரிட்டேஜ் மோட் டாரிங் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு ரசிக்கும்படி உள்ளது.

சந்தைக்கு வராத சில வகை சூப்பர் பைக்குகளையும் காண இக்கண்காட்சி ஒரு வாய்ப்பாக உள்ளது’’ என்றார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத் தில் ‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ 2016 வாகனக் கண்காட்சியை இன்றும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். 2 நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x