

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலை யத்துக்கும், ஆசர்கானா பேருந்து நிலையத்துக்கும் இடையே நகரும் படிக்கட்டுகள் கொண்ட பயணிகள் நடை மேம்பாலம் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை ஆசர்கானா பேருந்து நிலையத்தில் அனைத்துப் பேருந்து களும் நின்று செல்கின்றன. இங்கு வரும் பயணிகள் சாலை யின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் மீது ஏறி சாலையை கடக்கின்றனர். இத னால் விபத்துகள் நடக்கின்றன.
இவற்றைத் தடுக்க ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எதிரே உள்ள ஆசர்கானா பேருந்து நிலையம் வரை நகரும் படிக்கட்டுகள் கொண்ட் நடை மேம்பாலம் அமைக்க எனது எம்பி நிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்து தருகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித் துள்ளார்.