Published : 28 Mar 2017 10:02 AM
Last Updated : 28 Mar 2017 10:02 AM

நெல்லை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான ஜார்க்கண்ட் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்

பாளையங்கோட்டை நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில இளைஞர், திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள அழகர் ஜுவல் லர்ஸ் நகைக்கடையில், கடந்த 23-ம் தேதி, 37 கிலோ தங்க, வைர நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையின் போது, காரை நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் காட்டுக்குள் தப்பியோடினர். அவர்களில் ஒருவர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர், ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தை சேர்ந்த காலித் ஷேக்(35) எனத் தெரியவந்தது. காரில் இருந்த 37 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது.

திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் வரதராஜ் தலைமையிலான தனிப் படை போலீஸாரிடம், பணம், நகைகள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், காலித் ஷேக்கை திருநெல்வேலி அழைத்து வந்த தனிப்படை போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காலித்ஷேக் உள்ளிட்ட 5 பேர், கடந்த 10 நாட்களுக்கு முன்பே திருநெல்வேலி வந்துள்ளனர். திருநெல்வேலி சந்திப்பு, புரம், வண்ணார்பேட்டை, டவுன், பாளை யங்கோட்டை முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடை களுக்கு சென்று நோட்டமிட்டுள் ளனர்.

அப்போது அழகர் ஜூவல்லர்ஸ் அமைந்துள்ள பகுதியில் நள்ளிர வில் ஆட்கள் நடமாட்டம் குறைந் திருப்பதையும், கடையின் பின்புறம் வழி இருப்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும், அந்த கடைக்கு நகை வாங்க செல்வது போல் தலா 2 பேர் வீதம் சென்று நோட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு கொள்ளையடிக்க திட்டம் வகுத்து நிறைவேற்றியுள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நகைக் கடையில் கொள்ளை யடித்த 5 பேர் மீதும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. தப்பியோடியவர்களைப் பிடிக்க, ஜார்க்கண்ட் மற்றும் மும்பை செல்ல தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்கு பிறகு, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து, காலித் ஷேக் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x