Published : 07 Apr 2017 09:25 AM
Last Updated : 07 Apr 2017 09:25 AM

சென்னையில் இருந்து மதுரைக்கு கொரியரில் வெடிகுண்டு பொருட்களை அனுப்பியது கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை





சென்னையில் இருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் பலமுறை அனுப்பப்பட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர், நெல் லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு வெவ்வேறு நாட்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் குண்டு வெடித்த இடங்களில் இருந்து சில துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில், அல்காய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாத அமைப்பான ‘தி பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பே குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. குண்டு வைத்தவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த பிரஷர் குக்கரில் சீரியல் எண் கள் இருந்தன. அதன் அடிப்படை யில் விசாரித்ததில், மதுரையில் உள்ள பிரபல பாத்திரக் கடையில் குக்கர் வாங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மதுரையில் பதுங்கி யிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மதுரையில் முகா மிட்ட என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, அப்பாஸ் அலி (27), சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோரை மதுரையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி கைது செய் தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையில் பதுங்கி யிருந்த தாவூத் சுலைமான் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான், பால வாக்கம் எம்ஜிஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர் களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைசராக வேலை செய்துவந்தார். தீவிரவாத சம்ப வங்களுக்குத் தேவையான தகவல் களைப் பரிமாறுவது, தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்ற நபர்களுக்கு அனுப்புவது, ஆன்லைன் பணப்பரிமாற்றம், இணையதளம் வாயிலாக வெடி குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பது போன்ற நாசவேலைகளில் தாவூத் சுலைமான் ஈடுபட்டு வந்துள்ளார். ‘தி பேஸ் மூவ்மென்ட்’ தீவிரவாத அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது.

அனைத்து தகவல்களையும்..

இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நவீன ரக வெடிபொருட்களை சென்னையில் இருந்து மதுரைக்கு பிரபல கொரியர் நிறுவனம் மூலம் சுலைமான் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுலைமான் கொரியர் அனுப்பிய தேதிகள், நேரம் உட்பட அனைத்து தகவல்களையும் என்ஐஏ அதிகாரிகளிடம் கொரியர் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர். அதை வைத்து சுலைமான் என்னென்ன வகையான வெடி பொருட்களை அனுப்பினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x