Last Updated : 12 Aug, 2016 01:08 PM

 

Published : 12 Aug 2016 01:08 PM
Last Updated : 12 Aug 2016 01:08 PM

புதுக்கோட்டையில் அறிவொளி வெள்ளி விழா: 25 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவொளி குடும்பம் சங்கமம்

புதுக்கோட்டையில் நேற்று நடை பெற்ற அறிவொளி வெள்ளி விழாவில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு அறிவொளி குடும்பத்தினர் சங்கமித்தனர்.

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 1990- 1991-ம் ஆண்டில் அறி வொளித் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது.

ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செயல்படுத் தப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 30,000 பேர் பணியாற்றினர். அதில் சரிபாதியாக பெண்களும் இருந்தனர். பள்ளிப் படிப்பு வயதைக் கடந்தும் எழுதப்படிக்கத் தெரியாதோரைக் கண்டறிந்து அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலே கல்வி கற்பிக்கப் பட்டது. இத்திட்டத்தால் சுமார் 2.80 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றனர். சுமார் 50,000 பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். சுய தொழில், சுகாதாரம், பெண் உரிமை, சமத்துவம், ஜாதி வேறுபாடற்ற நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த மாவட்டத்தின் 58.4 சதவீதமாக இருந்த எழுத்தறிவு நிலை அறிவொளி திட்டம் மூலம் 81 சதவீதாக உயர்ந்தது. இத னால் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை அறி விக்கப்பட்டது. கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்த பல பகுதிகள் அறிவொளி நகர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அறிவொளித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதோடு சாதாரண மக்களோடு எளிதாகப் பழகியதால் ஆட்சியரின் பெயரை நினைவு கூர்ந்திடும் வகையில் கல்வி பெற்றோர், திட்டப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் தங்களது பிள்ளைகளுக்கு ஷீலாராணி என்று பெயரிட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் வெள்ளி விழா புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட் டத் தலைவர் அ.மணவாளன் தலைமையில் நேற்று நடைபெற் றது.

இந்த நிகழ்ச்சியில், அமெரிக் காவைச் சேர்ந்த கனடா நாட்டில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராங்க் என்ற பிரான்சிஸ்கோடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆங்கில நூலை (Light of knowledge) வெளியிட்டு, ஷீலாராணி சுங்கத் பேசினார்.

இந்த விழாவில், அறிவொ ளித் திட்டத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஆத்ரேயா மற்றும் தனது நூல் ஆய்வு குறித்து பிராங்க் உள்ளிட்டோர் பேசினர். கடந்த 25 ஆண்டுகளுப்பிறகு அறிவொளி குடும்பத்தினர் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x