Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

தமிழகத்தில் புதிதாக 5 ஆர்.டி.ஓ., 12 யூனிட் அலுவலகம் திறக்க திட்டம்

பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் புதிதாக 12 யூனிட் அலுவலகங்களைத் திறக்கவும், ஏற்கெனவே உள்ள 5 யூனிட் அலுவலகங்களை ஆர்.டி.ஓ. அலுவலகங்களாக தரம் உயர்த்தவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) உள்ளன. இதுதவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், பர்மிட் புதுப்பித்தல் உள்பட பல்வேறு பணிகள் இங்கு நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே, பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக யூனிட் அலுவலகங்கள் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து புதிதாக 12 யூனிட் அலுவலகங்களைத் திறக்க போக்குவரத்துத் துறை திட்ட மிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளும் அதிகரித்து வருகின்றன. இதுதவிர, ஆட்டோ கட்டணம் நிர்ணயம், சாலைப் பாதுகாப்பு கமிட்டி உள்பட பல்வேறு புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வரு கிறது. எனவே, புதிதாக 12 யூனிட் அலுவலகங்களும், ஏற்கெனவே உள்ள 5 யூனிட் அலுவலகங்களை ஆர்.டி.ஓ. அலுவல கமாக தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x