Published : 13 Mar 2017 08:05 AM
Last Updated : 13 Mar 2017 08:05 AM

பெரம்பலூரில் மாந்திரீக விவகாரம்: சடலத்தை தோண்டி எடுத்து கொடுத்த மேலும் 2 பேர் கைது

பெரம்பலூரில் அழுகிய நிலை யிலுள்ள இளம்பெண் சடலத்தை வைத்து மாந்திரீகம் செய்து வந்த விவகாரத்தில், மயானத்திலிருந்து சடலத்தை தோண்டி எடுத்துக் கொடுத்தது தொடர்பாக மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப் பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் கல்யாண் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே யுள்ள எம்.எம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து மாந்திரீக தொழில் செய்து வந்தார். இவரது வீட்டி லிருந்து அழுகிய நிலையில் இளம் பெண் சடலத்தை கடந்த 10-ம் தேதி போலீஸார் மீட்டனர். அப்போது வீட்டில் மாந்திரீக பூஜைகள் செய்ததற்கான தடயங் கள் காணப்பட்டன. இதையடுத்து கார்த்திகேயன், அவரது மனைவி நஷிமா என்கிற தீபிகா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், அந்த சடலம் ஜனவரி 18-ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த அபிராமி யுடையது(21) என்பதும், மயிலாப் பூர் மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது சடலத்தை ஜனவரி 24-ம் தேதி தோண்டி எடுத்து கார்த்தி கேயனின் நண்பர்கள் வினோத் குமார், சதீஷ் ஆகியோர் பெரம் பலூர் கொண்டு வந்து கொடுத் ததும், இதற்கு மயான ஊழியர்கள் தன்ராஜ்(34), கார்த்திக்(27) ஆகி யோர் பணம் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து தன்ராஜ், கார்த் திக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் குமார்(32), கார் ஓட்டுநர் சதீஷ்(28) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும், கார்த்திகேயன் வீட்டிலிருந்து சுமார் 20 மனித மண்டை ஓடுகள் கைப்பற்றப் பட்டன. இந்த மண்டை ஓடுகளை திருச்சி ஓயாமரி சுடுகாட்டு ஊழியர் களிடம் பணம் கொடுத்து எடுத்து வந்ததாக கார்த்திகேயன் தெரிவித் துள்ளார். அபிராமியின் சடலத்தை தோண்டி எடுத்து வந்ததுபோல் வேறு சடலங்களை மயானங்களி லிருந்து கடத்தி வந்தாரா? மாந்தி ரீகம் செய்வதாக கூறி ஏமாற்றப் பட்ட நபர்கள் யாரேனும் உள்ள னரா? என மேலும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் மந்திரவாதி கார்த்தி கேயனை நீதிமன்ற உத்தரவு பெற்று விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக காவல்துறை யினர் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x