ஆண்டு முழுவதும் விழா கொண்டாட சசிகலா வேண்டுகோள்

ஆண்டு முழுவதும் விழா கொண்டாட சசிகலா வேண்டுகோள்
Updated on
1 min read

எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அதிமுக எனும் இயக்கத்தை மக்கள் சக்தி கொண்டு தொடங்கினார் எம்ஜிஆர். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற அண்ணாவின் வாக்கை தம் அரசியல் வாழ்வின் ஆதார நோக்கமாகக் கொண்டு அதையே அதிமுக வின் கொள்கையாக மாற்றி, தன் இறுதி மூச்சு வரை ஏழைப்பங்காளனாகவே வாழ்ந்து மறைந்தார். தனக்குப் பின்னாலும் அதிமுக தொடர வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருக்கமாகக் குறிப்பிட்டார். அதிமுக எனும் ஒப்பற்ற இயக் கத்தின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள், எக்கு கோட்டை யில் விரிசல் விடாதா? என்று எண்ணிக் கொண் டிருக்கும் இந்த வேளை யில், முன்பைவிட உறுதி யாய் அதிமுகவையும் தமிழ கத்தையும் காத்திட எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சூளுரை ஏற்போம்.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அவரது கனவை நிறைவேற்றும் வண்ணம் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை அதிமுக சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in