

ஆர்.கே.நகர் தொகுதியில் என் தேசம் என் உரிமை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜெ.ஜெயந்தி சந்திரன் நேற்று அறிவிக்கப்பட்டார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவால் என் தேசம் என் உரிமை கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை, பொதுமக்களால் நேர்காணல் செய்து, தேர்வு செய்யும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தன. அதில், அதே தொகுதியைச் சேர்ந்த ஜெ.ஜெயந்தி சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.