

முதியோர் உதவித்தொகை 100 நாட்களில் 47 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், திருப்பத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் பெரிய கருப்பன் பேசும் போது, ‘‘முதியோர் உதவித்தொகை பெற தகுதியிருந்தும், அம்மா திட்ட முகாமில் உத்தரவு வழங்கப்பட்டும், அவர்களுக்கு இன்னும் உதவி்த்தொகை வழங்கப்படவில்லை’’ என்றார்.
இதற்கு பதிலளித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி,உதயகுமார் பேசியதாவது:
தகுதியுடையவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படு கிறது. கடந்த 1962-ல் ரூ.20 ஆக இருந்த உதவித்தொகை 50 ஆண்டுகாலமாக எந்த ஆட்சியாளர்களாலும் உயர்த்தப்படாமல், தற்போது முதல்வர் அதை உயர்த்தி வழங்கியுள்ளார். திமுக ஆட்சி யில் ரூ. ஆயிரத்து 700 கோடியாக இருந்த உதவித்தொகை ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக உயர்த்தப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 100 நாட்களில் 47 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.