Published : 16 Mar 2014 01:00 PM
Last Updated : 16 Mar 2014 01:00 PM

அதிமுக இணையதள பிரச்சாரம்: தினமும் 3 லட்சம் பேருக்கு மின்னஞ்சல்

சமூக வலைதளங்கள் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், ஆதரவு கேட்டு தமிழகத்தில் 1.45 கோடி பேருக்கு இ - மெயில் அனுப்பும் பணியை அதிமுக தொடங்கியுள்ளது.

இளைஞர் - இளம் பெண்கள் பாசறை உறுப்பினரும் மதுரை அதிமுக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவின் மகனுமான வி.வி.ஆர். ராஜ்சத்யன்தான் இந்த இணையதள பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து “தி இந்து’விடம் பிரத்யேகமாக பேசிய ராஜ்சத்யன் கூறியதாவது: “மேடை பிரச்சாரமோ கொடிகள் தோரணங்கள் கட்டுவதோ மட்டுமே திட்டங் ழ்களையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து விடாது.

இதை உணர்ந்துதான் இந்த இணையதளப் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறோம். இதற்காக 10 பேர் கொண்ட ஒரு குழு 3 மாதங்களாக பணியாற்றி தமிழகத்தைச் சேர்ந்த 1.45 கோடி வாக்காளர்களின் இ- மெயில் முகவரிகளை எடுத்தோம். இதில் மூன்றில் ஒரு பங்கு முகவரிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தது.

நாங்கள் சேகரித்த இ-மெயில் முகவரிகளை வைத்து தொழிலதிபர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் என பலவாறாக தரம் பிரித்தோம். இன்னொரு குழு, அம்மாவின் சாதனைகளையும் எதிர்கால திட்டங்களையும் பட்டியலிட்டு தனி மெயிலர் ஒன்றை ரெடி செய்தது.

எல்லா பணிகளையும் முடித்து வெள்ளிக்கிழமை முதல் வாக்காளர்களுக்கு இ-மெயில்களை அனுப்ப ஆரம்பித்திருக் கிறோம். தினசரி 3 லட்சம் பேருக்கு இந்த இ - மெயிலை அனுப்பத் திட்டமிட் டிருக்கிறோம். இவற்றோடு அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களையும் அனுப்புகி றோம்.

இதற்காக 40 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. பொதுவான மெயிலர் அனைவருக்கும் அனுப்பப்படும். இதில்லாமல், அந்தத் துறை சார்ந்தவர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் அம்மா அரசு செய்து கொடுத்தி ருக்கும் சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு அனுப்பவும் வேலை கள் நடக்கின்றன.

ஆன்லைன் பத்திரிகை

இதில்லாமல், ஆன்லைன் பத்திரிகைகளில் அதிமுக அரசு குறித்தும் அம்மா பற்றியும் வரும் செய்திகளுக்கு சில பேர் விமர்சனங்களை பதிவு செய்கின்றனர். அதற்கு எல்லாம் பதில் கொடுக்கும் வேலையையும் தொடங்கி இருக்கிறோம்.

அம்மா பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்தச் செய்தி வந்தாலும் உடனடியாக எங்களுக்கு ரூட் ஆகும்படி ஒரு அப்ளிகேஷன் போட்டு வைத்திருக்கிறோம். அதனால் உடனுக்குடன் பதில் கொடுக்க முடியும்’’ இவ்வாறு தெரிவித்தார் ராஜ்சத்யன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x