

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கன்னியாகுமரியை அடுத்த முருகன் குன்றத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரியில் அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு காரில் சென்றார். வேட்பாளர் வசந்தகுமார், எம்.எல்.ஏ. விஜயதரணி உடனிருந்தனர்.
முருகன்குன்றம் தங்க நாற்கர சாலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜா ஆறுமுக நயினார், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல், ஜோசப், பெசில்ராஜா உள்ளிட்டோர், ஞானதேசிகன் காரை சோதனை செய்தனர்.
அப்போது ஞானதேசிகன், ‘ தேர்தல் கமிஷனர் வண்டியில் பல கோடி இருக்கும். அவரைப் போய் பிடியுங்கள்’ என்று கிண்டலடித்தார். பறக்கும் படை அதிகாரிகள், ‘எங்கள் கடமையை செய்கிறோம்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஞானதேசிகன் கார் புறப்பட்டு சென்று விட்டது.
பறக்கும் படை அதிகாரிகள் இது தொடர்பாக புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.