Published : 13 Feb 2017 07:53 AM
Last Updated : 13 Feb 2017 07:53 AM

முன்னதாகவே ஒரு முடிவுக்கு வருவது ஏன்? - உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம்: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கருத்து

‘உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம். ஏன் அதற்கு முன்னரே ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?’ என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பினார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று 2-வது நாளாக கூவத்தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சென்று பார்த்தார். எம்எல்ஏக்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தி னார். ஒவ்வொருவராக அழைத்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது:

எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் கள் யாரையும் அடைத்து வைக்க வில்லை. அவர்கள் ஒரு நல்ல குடும்பமாக இங்கு இருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எம்எல்ஏக்கள் எவ்வளவு சுதந்திரமாக தன் மனதில் உள்ளதை சொல்லிக்கொண்டு, அதிமுகவுக்கு, அரசுக்கு எந்த ஒரு சின்ன பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றனர். எங்களிடம் இருந்துபோன ஒரு சிலர், எங்கள் எதிரிக்கட்சிகள் சேர்ந்து சில தவறான தகவல்களை வெளியில் பரப்பி வருகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை.

எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இங்கு இருக் கின்றனர். அவர்களுடைய இல்லங் களுக்கு தொலைபேசி மூலம் பேசுகின்றனர். சின்னக் குழந்தைகள் உள்ளவர்களும் இங்கு இருக்கின்ற னர். அவர்கள் என்னிடம், ‘உங்கள் பெண் குழந்தையை தூக்கிச் சென்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இருந்தாலும் இந்த இயக்கத்துக்காக உறவினர்களிடம் கூறி குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள் ளோம்’ என்று என்னிடம் கூறியபோது, இந்த இயக்கத்தின் மீது எவ்வளவு பற்றாக இருக்கிறார்கள் என்பதை எண்ணி என் கண்ணில் கண்ணீர் வந்தது. இப்போது அனைவரும் சுதந்திரமாக இருப்பதையும், பேசி யதையும் பார்த்திருப்பீர்கள்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்வி களுக்கு அவர் பதிலளித்ததாவது:

தற்போதைய காலதாமதத்துக்கான காரணம் குறித்து என்ன நினைக் கிறீர்கள்?

உங்ளைப்போல்தான் நானும் நினைக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று ஊரறிய தெரிந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

எத்தனை எம்எல்ஏக்கள் தற்போது இருக்கிறார்கள்?

இங்கே பாருங்கள். வேண்டும் என்றால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக கூறினீர் களே, அது எது?

அந்த சக்தி உங்களுக்கு தெரிந் திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லோரும் நீங்கள் சொல்ல வேண் டும் என்று எதிர்பார்க்கிறார்களே?

நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள் தானே.

எம்எல்ஏக்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருப்பார்கள்?

உங்களுக்கு செய்தி முன்னரே தெரிந்துவிட்டதா... நீங்கள் எந்த பத்திரிகை... அப்ப உங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதோ...

ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிரா கரித்துவிட்டார் என்ற தகவல் வந்தது. தற்போதைக்கு முதல்வர் ஆக முடியாது என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக உங்கள் நடவடிக்கை என்ன?

இல்லை அந்த செய்தியே பொய் யானது என்று ஆளுநர் மாளிகை தகவல் அனுப்பியுள்ளது. இந்தமாதிரி யான செய்திகளை வெளியிடுபவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுகிறார். அதை நன்றாக உணர்ந் தவர்கள் எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

வழக்கு தீர்ப்பு 2 நாளில் உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளதே?

வரட்டும் பார்க்கலாம். ஏன் அதற்கு முன்னரே நீங்கள் முடிவுக்கு வருகிறீர்கள்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x