மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் உறுதி - விவாதிக்க அனுமதிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு

மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் உறுதி - விவாதிக்க அனுமதிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு
Updated on
2 min read

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக 2 அணைகளை கட்டும் முயற்சியைத் தடுக்கவும், தமிழக உரிமையை நிலைநாட்டவும் சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

இருப்பினும், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேர மில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கோரினார். அதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்தார். தொடர்ந்து துரைமுருகன் பேசியதாவது:

கர்நாடகாவில் நடந்த சுதந்திர தின விழாவில் அந்த மாநில முதல்வர் சித்தராமையா பேசும் போது காவிரியின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் அணை கட்டுவதற்கான திட்டம் உருவாகிறது. அங்கே 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்துக்கு உலகளாவிய டெண்டர் கோரு வதற்கான நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்று கூறியுள்ளார்.

இப்பேச்சைக் கேட்டு தமிழக மக்கள் கவலை அடைந்துள்ளனர். அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதால், அவையை ஒத்திவைத்து உறுப் பினர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், இப்பிரச் சினையில் மத்திய அரசு உடனடி யாக தலையிட வேண்டுமென வலியுறுத்த வேண்டும். முதல்வர் தலைமையில் பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று பிரதமரிடம் இப்பிரச்சினையை எடுத்துக் கூற வேண்டும்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் பேசினர். அதையடுத்து பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:

கர்நாடக அரசு, மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக 2 அணை கள் கட்டவிருப்பதாக பத் திரிகைகளில் செய்தி வெளியான தும், இப்பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதுபோல கர்நாடக அரசுக்கும், மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகத்துக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதற்கு பதில் வராததால், அணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கு விரைவில் விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகை யில், எந்தவொரு திட்டத்தை யாவது செயல்படுத்த உத்தேசிக்கு மானால், தமிழ்நாட்டின் உரி மையை நிலைநாட்ட சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதைத் தொடர்ந்து இப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், அத னைக் கண்டித்து திமுக உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in