

கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக பேருந்துகள் ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில் நிறுத்தப்பட்டன. இதனால், பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் மாநில எல்லையில் தவிக்கும் நிலை ஏற் பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாய சங்கங்கள் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதற்கு பல கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டன. இதனால் நேற்று காலை முதல் மைசூரு, மண்டியா மற்றும் பெங்க ளுருவில் விவசாய சங்கத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட் டங்களில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் 400-க்கும் அதிகமான தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லை வரை மட்டுமே இயக் கப்பட்டன. இதனால் பண்டிகைக் கால விடுமுறை முடிந்து தமிழகத்தில் இருந்து பெங்களுரு மற்றும் கர்நாடகாவில் உள்ள இதர நகரங்களுக்கு பேருந்துகளில் சென்ற பயணிகள் மாநில எல்லை யில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன. சுமார் 3 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு சரக்கு வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓசூர் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம்
மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மாதேஸ்வரன் மலை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பாலாறு சோதனைச் சாவடியில் மேட்டூரில் இருந்து கர்நாடகத்துக்கு இயக்கப் பட்ட பேருந்துகள், தமிழக எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக் கப்பட்டன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் ஆசனூர் வழியாக வும், தாளவாடி வழியாகவும் கர்நாடக மாநிலத்துக்கு சாலை வசதி உள்ளது. இதில், கோவை, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை.
அதே நேரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. தாளவாடி பகுதி யில் இருந்து சாம்ராஜ் நகருக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக் கப்பட்டன. கனரக வாகனங்கள், கார் உள்ளிட்ட தனியார் வாக னங்களும் இயங்கின.