

பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக் குளம் அணை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்களின் குழந்தைகள் தமிழக பொதுப்பணித் துறை வாகனம் மூலமாக பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலை யில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பொதுப்பணித் துறை வாகனம் பரம்பிக்குளம் வந்து செல்ல கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனால் பரம்பிக்குளம் பகுதி யைச் சேர்ந்த மாணவர்கள் ஆனை மலைக்குப் பள்ளிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதை யடுத்து, தமிழக பொதுப்பணித் துறை வாகனங்கள் மூலம் மாணவர் களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கோரி பரம்பிக்குளம் சென்ற தமிழகப் பேருந்தைச் சிறைபிடித்து மலை வாழ் மக்களும், பள்ளிக் குழந்தை களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கேரள வனத்துறையினர் அனுமதி கொடுக்காததால் வாகனத்தை இயக்க முடியவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த கேரள வனத்துறை மற்றும் போலீ ஸார் மலைவாழ் மக்களையும், பேச்சு வார்த்தை நடத்திய பொதுப் பணித் துறை அதிகாரிகளையும் தாக்கினர். இதில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். டாப் சிலிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. தொடர்ந்து, பொள்ளாச்சி யில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். கோவை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இளங்கோவன், கேரள மாநில சித்தூர் தொகுதி (சி.பி.எம்.) சட்டப்பேரவை உறுப்பினர் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கேரள போலீஸாரால் தாக்கப்பட்ட தகவல் அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகளை சேர்ந்த 50-க் கும் மேற்பட்டோர் சேத்துமடை வனத்துறைச் சாவடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தமிழக அதிகாரி களைத் தாக்கிய கேரள போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 30 பேரை தமிழக போலீஸார் கைது செய்தனர்.