

திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகள் கீர்த்தனா(21). இவர், அதே ஊரைச் சேர்ந்த செந்தில் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சரவணனிடம் கீர்த்தனா கொடுத்துள்ள மனு: சேலத்தில் சித்த மருத்துவம் படித்து வருகிறேன். எனது ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை ஏழரை ஆண்டுகளாக காதலித்தேன். எனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஜூன் 24-ல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மதுரை காவல்துறை துணை ஆணையரிடம் தஞ்சமடைந்தோம். அவரது அறிவுறுத்தலின்படி, மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றோம். அங்கு எங்கள் பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தி, என்னை செந்தில்குமாருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மதுரையில் நிம்மதியாக வாழ முடியாது என்பதால், திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே மட்டப்பாறையில் செந்தில்குமாரின் உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கு எனது உறவி னர்கள், எங்களைத் தேடி வந்தனர். நாங்கள் தப்பி விட்டோம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நாங்கள் தங்கியிருந்த வீட்டை சேதப்படுத்தி சென்றனர்.
எங்களைப் பின்தொடரும் கொலைக் கும்பலிடம் இருந்தும், எனது பெற்றோரிடம் இருந்தும் எங்களைப் பாதுகாக்க திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள் ளோம். எங்களை கவுரவக் கொலை செய்ய முயற்சிக் கும் எங்கள் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீஸார் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.