

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதத்தில் ஒரு மதிப்பெண் வினா மொழிபெயர்ப்பு பிரச்சினையால் தமிழ்வழி பயிலும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. அதைத் தொடர்ந்து நேற்று கணிதத் தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒரு வினா குழப்பமாக கேட்கப் பட்டுள்ளதாகவும், அதற்கு மதிப் பெண் வழங்க வேண்டுமெனவும் மாணவ, மாணவிகள் வலியுறுத்து கின்றனர்.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ‘கணிதத் தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்களில் நிகழ் தகவு குறித்து 15-வது வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. சீட்டுக் கட்டு தொடர்பான அந்த கேள்வியில், பூ போன்ற தலைகீழ் குறியீடு கொண்ட சீட்டை (ஏஸ்) தவறுதலாக பகடை என மொழிபெயர்த்துள்ளனர். பகடை என்பது வேறு வகை விளை யாட்டுச் சொல் என்பதால் அனை வருக்குமே குழப்பம் ஏற்பட்டது. இதனால் பலரும் தவறாகவே பதிலளித்துள்ளனர். ஏஸ் என்ப தற்கான தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையால் தமிழ்வழி பயிலும் மாணவர்கள் குழப்ப மடைந்தனர். ஆனால் ஆங்கில வழியில் பயில்வோருக்கு மொழி பெயர்ப்பு தேவையில்லை என்ப தால் பிரச்சினை ஏற்படவில்லை. இந்த வினாவுக்கான மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.
மாணவர் ஒருவர் கூறும்போது, ‘வினாவில் ஏற்பட்ட குழப்பத்தால், அதை புரிந்துகொள்ளவே நீண்ட நேரம் பிடித்தது. பெரும்பாலான வர்கள் அந்த கேள்விக்கு தவ றாகவே பதிலளித்துள்ளனர். மற்றபடி கணிதத் தேர்வு எளி தாகவே இருந்தது’ என்றார்.