Published : 20 Jan 2017 08:36 AM
Last Updated : 20 Jan 2017 08:36 AM

ஜன. 21, 22-ல் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ கருத்தரங்கம்: ‘தி இந்து’, ஆஸ்பயர் லேர்னிங் இணைந்து நடத்துகின்றன

‘தி இந்து’ (தமிழ்) மற்றும் ஆஸ்பயர் லேர்னிங் நிறுவனம் இணைந்து தமிழகம், புதுவை மற்றும் போர்ட் பிளேரில் 33 இடங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்காக ‘தேர்வுக்கு வழிகாட்டி’ எனும் கருத்தரங்குகளை இலவசமாக நடத்திவருகின்றன.

டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சாவூரிலும், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் பழனி, திருவள்ளூர், நாகர்கோவில், தூத்துக்குடி, தேனி, காஞ்சிபுரம், ஓசூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட 21 இடங்களிலும் கருத்தரங்குகள் நடைபெற்றன. இக்கருத்தரங்குகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நாளை (ஜன. 21) மாலையில் பெரம்பூர், அண்ணா நகரிலும், நாளை மறுநாள் (ஜன. 22) காலையில் ஆவடி, போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் அடையார், மயிலாப்பூர், தி.நகரிலும் கருத்தரங்கங்கள் நடக்கவிருக்கின்றன.

மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு நன்கு புரிந்து படிப்பதன் மூலம் ‘நீட்’ மற்றும் ‘ஜெஇஇ’ போன்ற நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளத் தேவையான எளிய முறைகள் இக்கருத்தரங்கத்தில் விளக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வுகளையும் சுலபமாக எதிர்கொண்டு சிறந்த மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும் என்பது பற்றியும் அதற்குத் தேவையான செய்முறைகளும் இக்கருத்தரங்கத்தில் விளக்கப்படும். நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளத் தேவையான குறிப்புகளும் அளிக்கப்படும்.

இக்கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புகிறவர்கள் தங்கள் அருகிலுள்ள ஆஸ்பயர் லேர்னிங் சென்டரை நேராகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு தங்களது வருகையை உறுதி செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840632977, 8754472060.

இந்த கருத்தரங்கில் தங்களது பள்ளி மாணவர்களை பங்கேற்கச் செய்ய விரும்பும் ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் 8754472060 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். www.aspirelearning.com என்ற இணையதளத்தையும் காணலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x