Published : 05 Jan 2016 08:32 AM
Last Updated : 05 Jan 2016 08:32 AM

மாணவர்களின் திறன்களை மேம்படுத்த 9, 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 9, 10-ம் வகுப் பில் தொழிற்கல்வி பாடத்தை கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

மாநில பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது மேல்நிலைக் கல்வியில் (பிளஸ்-1, பிளஸ்-2) மட்டும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் தட்டச்சு, பொறியி யல், விவசாயம், நர்சிங் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், 10-ம் வகுப் புக்கு கீழே இத்தகைய தொழிற் கல்வி பாடங்களோ, அவை தொடர் பான செய்முறை பயிற்சிகளோ இல்லை.

ஆனால், இன்றைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப புதிய பாடங்களை அறிமுகப் படுத்துவதில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளி கள் முன்னோடிகளாக திகழ்கின் றன. கடந்த 2007-ல் இந்திய தேசிய பங்குச் சந்தை உதவியுடன் 11, 12-ம் வகுப்பில் நிதிச்சந்தை மேலாண்மை என்ற புதிய பாடத்தை சிபிஎஸ்இ கொண்டுவந்தது.

தற்போது வங்கிச் சேவை, நிதிச் சேவை, காப்பீடு உள்ளிட்ட துறை களில் முறையாகப் பயிற்சி பெற்ற வர்கள் தேவையான அளவுக்கு இல்லை. இதை கருத்தில்கொண்டு இத்துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு 9, 10-ம் வகுப்புகளில் பங்குச்சந்தை, நிதி மேலாண்மை தொடர்பான புதிய விருப்பப் பாடங்களை அறி முகப்படுத்தியது. மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத் தலின்பேரில் இந்த நடவடிக் கையை சிபிஎஸ்இ மேற்கொண் டது.

இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகை யில் 9, 10-ம் வகுப்பில் தொழிற் கல்வி பாடத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமான பாடங்களுடன் கூடுதலாக ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தொழிற்கல்வி திறன் மேம்பாடு தொடர்பாக போபாலில் உள்ள மத்திய அரசின் பண்டிட் சுந்தர்லால் சர்மா தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் வரையறை செய்துள்ள பயிற்சிகளை அறிமுகப் படுத்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x