

ஆர்.கே நகர் தொகுதி பாதுகாப்பு பணிக்காக வட மாநிலங்களில் இருந்து 900 துணை ராணுவப் படையினர் 2 நாளில் சென்னை வரவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே நகர் தொகுதியில் பாதுகாப்பு பணியை சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் முடுக்கி விட்டுள்ளார். அதன்படி வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் ஜோசி நிர்மல் குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று மட்டும் 72 வேட் பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அவர்களது ஆதரவாளர்களும் திரண்டதால் கூட்டம் அலை மோதி யது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 500 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், வாக்குப் பதிவு பாதுகாப்பு பணிக்காகவும், தேர்தல் பிரச்சார பாதுகாப்பு பணிக்காகவும் வட மாநிலங்களில் இருந்து 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை வர உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கம் பெனியிலும் 150 துணை ராணு வத்தினர் வீதம் 900 துணை ராணுவப் படையினர் சென்னை வர உள்ளனர். அவர்கள் பதட்டமான இடங்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளனர்.