

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மார்ச் 15-ம் தேதி அக்கட்சியின் அலுவலகத்தில் நடக்கிறது.
சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை தொடர்ந்து, பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஓபிஎஸ் அணியும், திமுகவும் முடிவு செய் துள்ளன. இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் மற்றும் செயல ரிடம் திமுக வழங்கியுள்ளது. எனவே, பட்ஜெட் கூட்டம் தொடங் கும் நாளிலேயே அது தொடர்பான பிரச்சினை எழும் என்று கருதப்படுகிறது.
எனவே, பட்ஜெட் கூட்டத் தொட ரின் போது இதை எப்படி அணுகு வது என்பது தொடர்பாக ஆலோ சிக்க வரும் 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக் கள் கூட்டம் நடக்கிறது. அன்று பகல், ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடக்கிறது. அதில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.