தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிக்கு கலாம் விருது: சுதந்திர தினத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிக்கு கலாம் விருது: சுதந்திர தினத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Updated on
2 min read

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் பெயரில் கடந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. 2-ம் ஆண்டாக நேற்று, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ப.சண்முகத்துக்கு அப்துல்கலாம் விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மின் மயான பராமரிப்பாளர் ஜெயந்திக்கு வழங்கப்பட்டது.

முதல்வரின் நல் ஆளுமை விருதின் கீழ், மகாமகம் விழா வுக்கு ஏற்பாடுகளை செய்த, அப் போதைய தஞ்சை ஆட்சியர் என்.சுப்பையன், காவல்துறை கண் காணிப்பாளர் மயில்வாகனனுக்கு வழங்கப்பட்டது. கிராமப்புற திடக்கழிவு மேலாண்மைக்கான -தூய்மைக் காவலர் விருது - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் நக ராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள், இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்துக்காக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் விருதை பெற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக் காக பணியாற்றிய சிறந்த மருத் துவருக்கான விருது சென்னை யைச் சேர்ந்த மருத்துவர் து.ராஜா கண்ணன், சிறந்த சமூக பணி யாளர்- எம்.பி.முகமது ரபி ஆகி யோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நிறுவனத்துக்கான விருதை சிறுமலர் செவித்திறன் குறையுடை யோர் மேல் நிலைப்பள்ளி சார்பில் ஜெசிந்தா ரோசலின் பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகள வில் வேலை அளித்த நாமக்கல் அன்னை ஜே.கே.கே. சம்பூரணி யம்மாள் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான விருதை சேலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றது. மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சென்னை, முகப்பேர் கலைச்செல்வி கருணா லயா சமூக நலச் சங்கத்துக்கும், திருநின்றவூர் சேவாலயா நிறுவனர் வி.முரளிதரனுக்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் அடிப்படையில், சிறந்த மாநகராட்சிக்கான விருதை திண்டுக்கல் பெற்றது. மேயர் வி.மருதுராஜ், ஆணையர் என்.மனோகர் ஆகியோரிடம் முதல்வர் ஜெயலலிதா விருதை வழங்கினார். அதேபோல், நகராட்சிகளில் முதல் பரிசு பட்டுக்கோட்டைக்கும், 2-ம் பரிசு பெரம்பலூர், 3-ம் பரிசு ராம நாதபுரத்துக்கும் கிடைத்தது. சிறந்த பேரூராட்சிகளுக்கான விருது களை, பரமத்தி வேலூர், சின்ன சேலம், பெரியநாயக்கன்பாளை யம் பேரூராட்சிகள் பெற்றன.

இவற்றை தொடர்ந்து, முதல் வரின் இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாஷா புத்தாக்க மையம் நடத்தி வரும் கா.மாஷா நசீம், மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த தெருவோர நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ம.அபர்ணா பெற்றனர். ஆண்கள் பிரிவில் வெள்ள மீட்பு பணிக்காக சென்னை எழும்பூரைச் சேர்ந்த ப.ரூபன் சந்தோஷ், திண்டுக்கல்லைச்சேர்ந்த ஜா.முகமது ரபீக்கும், சாலை பாதுகாப்பு பணிக்காக மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்த மு.சி.சரவணக்குமாரும் பெற்றனர்.

விருதுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, நிகழ்ச்சி முடிவில் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்துல்கலாம் விருது பெற்ற மத்திய தோல் ஆய்வு நிறுவன முதன்மை விஞ்ஞானி ப.சண்முகம் கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக குப்பை மூலம் எரிசக்தி உற்பத்திக்கான ஆய்வு களை செய்து வருகிறேன். மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குப்பை, காய்கறி கழிவுகளை பயன்படுத்தி மீத்தேன் வாயு தயாரித்து, அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத் துக்கு தமிழக அரசுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். இதன் மூலம் எதிர்காலத்தில் குப்பைகள் இல்லாத கிராமம், நகரம் உருவாகும். இதன்மூலம் தமிழகம் முன்மாதிரியாக திகழும்” என்றார்.

கல்பனா சாவ்லா விருது பெற்ற ஜெயந்தி கூறும்போது, ‘‘விருதை வழங்கும் போது, பிராமணர் வகுப்பைச் சேர்ந்த நான் மின் மயான மேலாளராக பணியாற்றுவது குறித்து முதல்வர் கேட்டு, பெருமையாக இருப்பதாக கூறினார். என் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போது எனக்கு உறுதுணையாக உள்ளனர். விருதை வழங்கிய முதல்வருக்கு நன்றி” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in