தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றும் ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றும் ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி யில் தேசிய ஒருமைப்பாட்டை பறை சாற்றும் சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கில் அனைத்து சமுதாய மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண் டனர்.

ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா வில் 842-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா கடந்த 4-ம் தேதி கொடி ஏற்றத் துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை ஏர்வாடி முஜாபீர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து புறப்பட்டது. இதில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் திரளானோர் சந்தனப் பேழைகளுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சந்தனக்குடத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப் பட்டு 5 மணியளவில் சந்தனக் கூடு தர்கா வளாகத்தை வந்து சேர்ந்தது. வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மலர்களை தூவி வர வேற்றனர். பிறகு சிறப்புப் பிரார்த் தனைகளுடன் பிரதான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக அரசு ஹாஜி சலாஹுதீன் சிறப்புப் பிராத்தனை செய்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் விழாவில் கலந்துகொண்டு பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இருந்தும் ஏராளமான இந்து சமுதாய மக்களும் கலந்துகொண் டனர். மக்கள் வசதிக்காக ராமநாத புரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் ஏர்வாடிக்கு இயக் கப்பட்டன. சந்தனக்கூடு திரு விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மேற்பார் வையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர். தர்கா வளாகத் தில் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in