

கோவை உக்கடம் தெற்கு ஹவு சிங் யூனிட்டைச் சேர்ந்தவர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக்(31). இவர் கடந்த வியாழக்கிழமை இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அருகே மர்ம நபர் களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். கடந்த ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வன்முறையில் இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதால், மத ரீதியான பிரச்சினை இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதனிடையே, கோவை போத்த னூர் ராம் நகரைச் சேர்ந்த எம்.அன்ஷர்த்(31) என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசா ரிக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர். இக்கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் உத்தரவின்பேரில் துணை ஆணையர் சரவணன் மேற்பார்வை யில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: கொலை செய்யப்பட்ட பாரூக், திராவிடர் விடுதலை கழகத் தின் நிர்வாகியாக இருந்துள்ளார். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளக் குழுக்களில் கடவுள் மறுப்பு கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். ‘கடவுள் இல்லை’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றையும் வைத்திருந்தார். அதனால் ஏற்கெனவே அவருக்கு மத அடிப்படைவாத குழுக்களிடம் இருந்து பல முறை மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் அதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் அவர் அளிக்கவில்லை.
சம்பவத்தன்று, அவருக்கு நெருக்கமான நபர்களே செல்போ னில் பேசி உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே வரவழைத்துள்ள னர். எனவே அவருக்கு நெருக்க மான நபர்களுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது. ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அப்பகுதி மக்களிடமும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் சோதனை செய்து வருகிறோம். மத அடிப்படைவாதக் குழுக்களின் செயலாக இருக்கும் என கருதுகி றோம். சரணடைந்த நபரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது முழு விவரம் தெரியவரும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.