சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அமைச்சர் உறுதி

சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அமைச்சர் உறுதி
Updated on
1 min read

சமையல் காஸ் மானியம் இப்போதைக்கு ரத்து செய்யப்படாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமையல் காஸ் மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக் கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வசதி படைத்தவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் சூசகமாக தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியபோது, சமையல் காஸுக்கு வழங்கப்படும் மானியத்தை உடனடியாக ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in