ஸ்டாலினிடம் சிரித்தது குற்றமாகாது: சசிகலாவுக்கு ஓபிஎஸ் பதில்

ஸ்டாலினிடம் சிரித்தது குற்றமாகாது: சசிகலாவுக்கு ஓபிஎஸ் பதில்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.

இதையடுத்து அதிமுகவின் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் கூறுகையில் ஸ்டாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, ''மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பொருளாளராக நியமிக்கப்பட்டேன். அந்தப் பணியை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவனாக, என் மனதுக்கு நிறைவாகச் செய்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தமிழகத்தில் யாருக்கும் உரிமையில்லை.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. கழகம், தொண்டர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in