Published : 12 Feb 2017 08:47 AM
Last Updated : 12 Feb 2017 08:47 AM

மார்ச் 31-ம் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில மற்றும் பிற அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி முனி சிபல் சட்டம் 1919-ன்படி, 6 மாதங் களுக்கு ஒருமுறை தொழில் வரி செலுத்த வேண்டும். மேலும் நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிறும வரி மூலதனத்தை பொருத்து வரி செலுத்த வேண்டும்.

2016-17 நிதியாண்டுக்கான 2-ம் அரையாண்டு தொழில் வரியை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சராசரி அரையாண்டு வருமானம் ரூ.21 ஆயிரம் வரை உள்ளோர் தொழில் வரி செலுத்த தேவையில்லை. ரூ.21 ஆயிரத்து 1 முதல் ரூ.30 ஆயிரம் வரை அரையாண்டு வருமானம் பெறுவோர் ரூ.100-ம், ரூ.30 ஆயிரத்து 1 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.235-ம், ரூ.45 ஆயிரத்து 1 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.510-ம், ரூ.60 ஆயிரத்து 1 முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.760-ம், ரூ.75 ஆயிரத்து 1-க்கு மேல் வருமானம் பெறுவோர் ரூ.1095-ம் தொழில் வரியாக செலுத்த வேண்டும். இந்த வரியை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் அபராதம் அல்லது வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x