

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது.
இருதரப்பும் நாளை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இந்தப் பதில் மனு சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
''பொதுச் செயலாளர் நியமனம் கட்சி விதிகளின் படியே நடைபெற்றது. பெரும்பாலான செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்'' என்று சசிகலா தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுச் செயலாளர் விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற உள்ளது.