

‘ஜன.5-ல் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் நடை பெறவுள்ள மாநில அளவிலான சாலை மறியல் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டப்படும்’ என்று அந்த அமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று அவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது: வரலாறு காணாத வறட்சியால் இதுவரை 65-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு ஏற் பட்டும், தற்கொலை செய்து கொண்டும் இறந்துள்ளனர்.
உடனடியாக வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும், இதற்கு ஆதரவு திரட்டுவதற் காக திமுக, காங்கிரஸ், பாமக, தமாகா, விடுதலை சிறுத் தைகள், மதிமுக, இடதுசாரி கட்சி கள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளை யும் விவசாயிகள் குழுவினருடன் சந்திக்க உள்ளோம் என்றார்.