

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீதான பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பா.மோகன் விசாரணையில் இருந்து விலகுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்பு ராஜ் மகன் நாகமுத்து. கோயில் பூசாரியான இவர் கடந்த 2012 டிம்பர் 8-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேரை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதையடுத்து பெரியகுளம் போலீஸார் ராஜா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தற்போது போலீஸ் தரப்பு சாட்சி களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட ராஜா, சிவக் குமார், ஞானம், லோகு, மணி மாறன், சரவணன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். இதில் பாண்டி என்பவர் இறந்துவிட்டார்.
போலீஸாரை தாக்கியதாக விசாரிக்க வேண்டிய நிலையில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.மோகன் சார்பில் மாவட்ட நீதிபதியிடம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு தரப்பினர் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இந்த வழக்கு விசா ரணையில் தொடர்ந்து ஆஜராக விரும்பவில்லை. எனவே விசார ணையில் இருந்து விலகுவதாக தன்னை நியமித்த மாவட்ட ஆட்சி யருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.பூர்ணிமா விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.