டிச.2-ல் வேலைநிறுத்த அறிவிப்பு: போக்குவரத்து ஊழியர் சங்கம் தகவல்

டிச.2-ல் வேலைநிறுத்த அறிவிப்பு: போக்குவரத்து ஊழியர் சங்கம் தகவல்
Updated on
1 min read

திருச்சியில் டிச.2-ம் தேதி நடக்கவுள்ள போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் மாநாட்டில் வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கக் கோரி, போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தொமுச பேரவை அமைப்பு செயலாளர் சி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரவுள்ள சாலை பாதுகாப்பு புதிய மசோதாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொமுச பொருளாளர் சி.நடராஜன் பேசும்போது, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர் களில் இன்னும் 40 சதவீதம் பேருக்கு சீருடை வழங்கப்படவில்லை. மற்ற துறைகளுக்கு வழங்கப்பட் டுள்ளதைப்போல், போக்கு வரத்துத் துறை ஊழியர்களுக்கு இன்னும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை’’ என்றார்.

சிஐடியுவின் தலைவர் சௌந்தர்ராஜன் எம்எல்ஏ பேசும் போது, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும் எனக் கூறி எல்லா தொழிற்சங் கங்களும் கடந்த 4 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

திருச்சியில் வரும் டிச.2-ம் தேதி வேலை நிறுத்த மாநாடு மற்றும் பேரணி நடக்கிறது. இந்த மாநாட்டில் வேலை நிறுத்தத் தேதி அறிவிக்கப்படும்’’ என்றார்.

இந்த மாநாட்டில், சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகி கள் மற்றும் ஆயிரக்கணக் கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in