

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு சமூக ஆர்வலர் மேதா பட்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில், மது,போதைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மதுவுக்கு எதிரான பிரச்சார பயணத்தில் மேதா பட்கர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமூகச் சீரிழிவுக்குக் காரணமாகவும், பல்வேறு குற்றச் செயல்களுக்கு அடிப்படையாகவும் அமையும் மதுவை ஒழிக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும்" என்றார்.