நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு
Updated on
1 min read

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை துணை ராணுவ வீரர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் மு.சங்கர் 11.3.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர் சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர் சங்கரின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in