மூலப்பொருள்கள் விலை உயர்வை கண்டித்து சாத்தூரில் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்

மூலப்பொருள்கள் விலை உயர்வை கண்டித்து சாத்தூரில் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

மூலப்பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து சாத்தூரில் உள்ள 600-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் ஒரு வார வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் தொடங்கின.

விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீப்பெட்டி ஆலைகளில் மூலப் பொருள்களான குளோரைடு, சல்பர், கேசின், அட்டை போர்டு, மாங்கனீசு, குச்சி உள்ளிட்ட 33 வகையான மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் விலை ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்த ஆண்டு தீப்பெட்டி தயாரிக்கும் மூலப் பொருள்கள் விலை 25 சதவீ தம் வரை உயர்த்தப் பட்டுள் ளது. மூலப்பொருள்கள் விலை அதிகரித்துள்ள நிலையில், தீப்பெட்டிக்கான விலை உயர்த்தப் படவில்லை. செலவு அதிகரித் துள்ளதால் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மூலப் பொருள் களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாத்தூர் பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் ஒருவார வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளன.

சாத்தூர் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.பழனிக்குமார் கூறியதாவது:

மூலப்பொருள்களின் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் தீப்பெட்டி தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஸ்டிரைக் அறிவிப்பால், 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள் ளனர். எனவே, தீப்பெட்டி தொழிலுக்கான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும். தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் மூலமாக மூலப்பொருள்களை கொள்முதல் செய்து, அதை தீப்பெட்டி ஆலைகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். தீப்பெட்டி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in