

செங்கல்பட்டு அருகே செம்மரக் கட்டை பதுக்கிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 டன் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த தாசிரிகுப் பம் உள்ள ஒரு குடோனில் ஆந் திராவில் இருந்து அடிக்கடி லாரி கள் வந்து செல்வதாக, வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் நேற்று குடோனை சோதனை செய்ததில் ஏராளமான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.
அப்போது, குடோனில் இருந்து தப்பியோடிய 3 பேரை வனத்துறை யினர் பிடித்தனர். 3 பேரையும் கைது செய்து குடோனின் பதுக்கி வைத்திருந்த, 20 டன் செம்மரக் கட்டைகள், 3 லாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனுக்கு சீல் வைக் கப்பட்டது. பிடிபட்ட செம்மரத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.